search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "பொங்கல் திருவிழா"

    • விழாவில் பலூன் உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.
    • போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற சிறுவர், சிறுமிகளுக்கான பரிசு வழங்கப்பட்டது.

    கோவில்பட்டி:

    கோவில்பட்டியில் ரஜினி ரசிகர் மன்றமும், பெரியசாமி நகர் பொதுமக்களும் இணைந்து நடத்தும் 5-ம் ஆண்டு தைத்திருநாள்விழா நடைபெற்றது. வக்கீல் மாரீஸ்வரன், ரஜினி ரசிகர் மன்ற மாவட்ட இணை செயலாளர் தவமணி ஆகியோர் தலைமை தாங்கினார்.

    ரஜினி ரசிகர் மன்றத்தை சேர்ந்த தொழிலதிபர் ஜெயக்கொடி, ராகவேந்திரா சேவா அறக்கட்டளை நிறுவனர் சீனிவாசன், ரஜினி ரசிகர் மன்ற நகர செயலாளர் மகேஷ்பாலா, பா.ஜனதா வெளிமாநில தமிழ் வளர்ச்சி பிரிவு மாவட்ட தலைவர் பழனிமாரியப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விழாவில் பெண்க ளுக்கான கோலப்போட்டி, பெரியவர் சிறியவர் மியூசிக்கல் சேர், பெரியவர் சிறியவர் பலூன் உடைத்தல், சிறுவர்க ளுக்கான ஓட்டப்பந்தயம், சிறுவ ருக்கான ஸ்லோ சைக்கிள் ரேஸ், சிறுவருக்கான சாக்கு போட்டி, தண்ணீர் நிரப்புதல். சிறுவர், சிறுமிகளுக்கான நடனப்போட்டி, பெரியவர்களுக்கான கயிறு இழுத்தல், பானை உடைத்தல், கோலப்போட்டி உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடைபெற்றது.

    போட்டிகளில் கலந்து கொண்டு வெற்றி பெற்ற பெண்கள் மற்றும் ஆண்கள் சிறுவர், சிறுமிகளுக்கான பரிசுப் பொருட்களை கோவில்பட்டி கிழக்கு இன்ஸ்பெக்டர் சுஜித் ஆனந்த், கோவில்பட்டி பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் நகராட்சி தினசரி சந்தை முன்னாள் வியாபாரிகள் சங்கத் தலைவரும், நகர்மன்ற உறுப்பினருமான முத்துராஜன், ரஜினி ரசிகர் மன்றமாவட்ட துணை செயலாளர் பெரியசாமி, நாதன், விஜய் ஆனந்த், வழக்கறிஞர் செந்தில் ஆறுமுகம், ஐக்கிய அரபு அமீரக பொருளாளர் பொன்முருகன்லட்சுமண ராஜா உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டு பரிசு பொருட்களை வழங்கினர்.

    தொழிலதிபர் அண்ணாதுரை, ஆசிரியர் வரப்பிரசாதம் கண்ணன், ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் சந்திரசேகர், ஜோதி காமாட்சி, சையத் அலி, காளி ராஜன், சந்தன மாரியப்பன், முருகன், சதீஷ், ராஜீவ் காந்தி, மலர் மாடசாமி, கணேசன், சேக் முகமது உள்ளிட்ட ஏராளமான ரஜினி ரசிகர்கள் பெரியசாமி நகர் பொதுமக்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை ரஜினி ரசிகர் மன்ற நிர்வாகிகள் செய்திருந்தனர்.

    • வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடந்தது
    • ஏராளமானோர் கலந்து கொண்டனர்

    வாலாஜா:

    வாலாஜா ஊராட்சி ஒன்றிய அலுவலக வளாகத்தில் தமிழர் திருநாளாம் தை பொங்கலை கொண்டாடும் விதமாக சமத்துவ பொங்கல் திருவிழா நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு வாலாஜா ஒன்றியக்குழு தலைவர் வெங்கட்ரமணன் தலைமை தாங்கினார்.

    மாவட்ட ஊராட்சிக்குழு தலைவர் ஜெயந்தி, ஒன்றியக்குழு துணை தலைவர் ராதாகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி வரவேற்றார்.

    சிறப்பு அழைப்பாளராக கலெக்டர் பாஸ்கர பாண்டியன் கலந்து கொண்டு தமிழர் பாரம்பரிய முறையில் பானையில் பொங்கல் வைத்து சமத்துவ பொங்கல் திருவிழாவினை கொண்டாடினர்.

    நிகழ்ச்சியில் ஊராட்சிகளின் கூட்டமைப்பு தலைவர் ஏ.கே.முருகன், வட்டார வளர்ச்சி அலுவலர் பாஸ்கரன், ஒன்றியக்குழு உறுப்பினர்கள், ஊராட்சிமன்ற தலைவர்கள், திமுக பிரதிநிதிகள், அரசு அதிகாரிகள், அலுவலக பணியாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    • அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது.
    • முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    சேலம்:

    சேலம் மாநகராட்சி அம்மாப்பேட்டை மண்டலம் கோட்டம் எண் .34 -க்கு உட்பட்ட புதுத்தெரு ஈசன் காம்ப்ளக்ஸ் அருகில் பொங்கல் விழா நடைபெற்றது. இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்ட மாநகராட்சி மேயர் ராமச்சந்திரன் தூய்மை பணியாளர்களுக்கு பொங்கல் சீர்வரிசை பொருட்களான பொங்கல்பானையுடன் பச்சரிசி, வெல்லம், முந்திரி, திராட்சை, ஏலக்காய், நெய், கரும்பு ஆகிய பொருட்களை வழங்கினார்.

    முன்னதாக தமிழகத்தின் பாரம்பரிய பெருமை களையும், தொன்மைமிக்க அடையாளங்களை பறைசாற்றும் வகையில் தமிழ் பாரம்பரிய இசை நிகழ்ச்சியும் நடைபெற்றது. எனது குப்பை, எனது பொறுப்பு, எனது நகரம் எனது பெருமை என்ற தூய்மை திட்டத்தின் கீழ் தூய்மையை வலியுறுத்தியும், தூய்மை இயக்கப் பணியில் மக்களை ஈடுபடுத்தும் விழிப்புணர்வு நிகழ்ச்சியும் நடைபெற்றது.

    புகையில்லா போகி, மாசு இல்லா போகியை கொண்டாடுவது குறித்த விழிப்புணர்வு நாடகமும் நடைபெற்றது. மேலும், போகி பண்டிகையால் ஏற்படும் புகை மாசுவை தவிர்க்க பழைய பொருட்களை தூய்மை பணியாளர்களிடம் வழங்கும் நிகழ்ச்சியும் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளி மாணவர்களின் விழிப்புணர்வு கலை நிகழ்ச்சியும், வேலு சரவணனின் கடல் பூதம் என்ற தலைப்பில் நாடகமும் நடைபெற்றது.

    இவ்விழாவில் அம்மாப்பேட்டை மண்டல குழுத்தலைவர் தனசேகர், கவுன்சிலர்கள் இளங்கோ, உதவி ஆணையாளர் கதிரேசன், சுகாதார அலுவலர் மாணிக்கவாசகம், சுகாதார ஆய்வாளர் சித்தேஸ்வரன், உதவி செயற்பொறியாளர் சுமதி மற்றும் தன்னார்வ அமைப்பைச் சார்ந்த நிர்வாகிகள், சமூக ஆர்வலர்கள் கலந்து கொண்டனர்.

    • ஜீவநதி நொய்யல் சங்கம் ஜீவானந்தம், மோகன் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.
    • தேசிய விருது பெற்ற பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.

    திருப்பூர்:

    திருப்பூர் மாநகராட்சி, நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து திருப்பூர் நொய்யல் கரையில் திருப்பூர் பொங்கல் திருவிழா என்ற பெயரில் ஜனவரி 15-ந்தேதி முதல் 17-ந்தேதி வரை 3 நாள் திருவிழாவாக கொண்டாடத் திட்டமிட்டுள்ளன.திருவிழா குறித்த இலச்சினை(லோகோ) வெளியிடப்பட்டது. மேயர் தினேஷ்குமார் இதை வெளியிட்டார். துணை மேயர் பாலசுப்ரமணியம், நிட்மா தலைவர் அகில் ரத்தினசாமி, ஜீவநதி நொய்யல் சங்கம் ஜீவானந்தம், மோகன் கார்த்திக் மற்றும் விழாக்குழுவினர் கலந்து கொண்டனர்.

    பொங்கல் திருவிழாவுக்காக நொய்யல் கரையில் யுனிவர்சல் தியேட்டர் ரோடு சந்திப்பு பகுதியில் பிரமாண்டமான மேடை அமைக்கப்பட உள்ளது. அமைச்சர்கள் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகள், கலெக்டர் உள்ளிட்ட உயர் அதிகாரிகள், முக்கிய பிரமுகர்கள் பங்கேற்கின்றனர்.தை முதல் நாளான ஜனவரி 15-ந்தேதி சமத்துவ பொங்கல் வைத்து விழா துவங்குகிறது. தொடர்ந்து மண்ணின் புகழ் பாடும், தமிழ் பண்பாடு மற்றும் கலாசாரத்தை பிரதிபலிக்கும் நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    வள்ளி கும்மி, பெருஞ்சலங்கை ஆட்டம், பெண்கள் தப்பாட்டம், களரி-சிலம்பாட்டம் மற்றும் திருவண்ணாமலை பெரிய மேளம் ஆகியன முதல் நாள் நிகழ்ச்சியில் இடம் பெறவுள்ளன.16-ந் தேதி, கரகாட்டம், காவடியாட்டம், கட்டைக்கால் ஆட்டம், தேவராட்டம், டொல்லு குனிதா (கர்நாடக மலையக கலை) நிகழ்ச்சி, நாட்டுப்புறப்பாடல்கள் இசை நிகழ்ச்சி ஆகியன நடைபெறவுள்ளது. தேசிய விருது பெற்ற பாடகி அட்டப்பாடி நஞ்சம்மாவுக்கு பாராட்டு விழாவும் நடக்கிறது.

    3-ம் நாள் நிகழ்ச்சியாக 3 ஆயிரம் குடும்பங்கள் இணைந்து புத்தாடை அணிந்து புதுப்பானையில் பொங்கல் வைக்கும் சமூக நல்லிணக்கப் பொங்கல் விழா நடைபெறவுள்ளது. இதற்கான ஏற்பாடுகளை மாநகராட்சி நிர்வாகம், நொய்யல் பண்பாட்டு அமைப்பு மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் ஆகியன இணைந்து மேற்கொண்டுள்ளன.17-ந் தேதி திருப்பூர் மண்ணின் மைந்தர்கள் பங்கேற்கும் தமிழ் பண்பாட்டு நிகழ்ச்சிகள் நடைபெறவுள்ளது.

    அன்று காலை 7 மணிக்கு மங்கள இசையுடன் குத்து விளக்கேற்றி நிகழ்ச்சிகள் தொடங்குகிறது. புத்தாடை அணிந்து புதுப்பானையில் 3 ஆயிரம் பேர் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தும் நிகழ்ச்சி தொடர்ந்து நடக்கிறது. பொங்கல் பானைகளுக்கு நாதஸ்வரம், தவில் இசையுடன் வணக்கம் செலுத்தும் நிகழ்ச்சி நடக்கிறது. அதன் பின் தமிழர்களின் சிறப்பான காவடியாட்டம், பெருஞ்சலங்கையாட்டம் என்னும் தமிழ் பேரொளி வழிபாடு, இதைப் பயின்று முதன் முதலாக அரங்கேற்றும் 250 பேர் பங்கேற்கும் நிகழ்ச்சி நடக்கிறது. பல்வேறு வெளிநாடுகளில் தமிழ் கலாசாரம் பரப்பிய குழுவினர் 500 பேர் பங்கேற்கும் வள்ளிக்கும்மி நிகழ்ச்சி, ஒயில் கும்மி, கோலாட்டம் நிகழ்ச்சியும் நடக்கிறது. தமிழர்களின் வீரத்தைப் பறை சாற்றும் சொட்டை முனை, கட்டுத்தடி, வேல் கம்பு, சுருள் வாள், சிலம்பாட்டம் நடக்கிறது. கொங்கு மண்ணின் வழிபாடான கம்பத்தாட்டம், பொய்க்கால் குதிரை, கட்டைக்கால் மற்றும் நையாண்டி மேளம், பறையாட்டம், கரகாட்டம் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடை பெறவுள்ளன. 

    திருப்பூர் : 

    நிட்மா மற்றும் ஜீவநதி நொய்யல் சங்கம் சார்பில் ஒவ்வொரு ஆண்டும் திருப்பூரில் நொய்யல் பொங்கல் திருவிழா கொண்டாடப்படுகிறது. கொரோனா காரணமாக தடைபட்டிருந்த விழா இந்தாண்டு கோலாகலமாக நடைபெற உள்ளது. அதற்கான ஆலோசனை கூட்டம் நிட்மா அலுவலகத்தில் நடந்தது.

    மேயர் தினேஷ்குமார் தலைமையில் நடந்த கூட்டத்தில் நிட்மா தலைவர் ரத்தினசாமி, ஜீவநதி நொய்யல் அமைப்பு செயலாளர் பொறியாளர் சண்முகராஜ், சலங்கையாட்ட குழுவை சேர்ந்த குமார், அருணாசலம், விஸ்வநாதன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

    இதுகுறித்து நிட்மா தலைவர் ரத்தினசாமி கூறியதாவது:- நொய்யல் கரையில் பாரம்பரிய வழக்கப்படி தை பொங்கல் விழா ஜனவரி 17-ந் தேதி கொண்டாடப்பட உள்ளது. காலை 6 மணி முதல்7மணிவரை 3000 பொங்கல் வைக்கப்படும்.தொடர்ந்து கலை நிகழ்ச்சிகள் நடக்கும். மாலையில் மேடை நிகழ்ச்சிகள் நடைபெறும்.

    அமைச்சர், எம்.எல்.ஏ., மேயர் உட்பட மக்கள் பிரதிநிதிகள், தொழில்துறையினர், தன்னார்வ அமைப்பினர் பங்கேற்கின்றனர். மாநகராட்சியுடன் இணைந்து நடக்கும் விழாவில் சலங்கையாட்டம், ஒயிலாட்டம், கும்மியாட்டம் போன்ற பாரம்பரிய கலை நிகழ்ச்சிகளுடன் ஜனவரி 17-ந் தேதி பொங்கல் விழா கொண்டாடப்படுகிறது.

    இவ்வாறு அவர் கூறினார்.

    • 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது.
    • 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    கேரள மாநிலம் திருவல்லாவை அடுத்து ஆலப்புழை, பத்தனம்திட்டை மாவட்டங்களின் எல்லையில் நீரேற்றுபுரத்தில் சக்குளத்துக்காவு பகவதி அம்மன் கோவில் உள்ளது. இங்கு இந்த ஆண்டுக்கான பொங்கல் திருவிழாவை முன்னிட்டு நேற்று பொங்கல் வழிபாடு நடந்தது.

    இதையொட்டி அதிகாலை 4 மணிக்கு நிர்மால்ய தரிசனம் தொடர்ந்து கணபதி ஹோமம், காலை 9 மணிக்கு கூட்டு பிரார்த்தனை நடைபெற்றது. 10.30 மணிக்கு கோவில் முன் பகுதியில் வைக்கப்பட்டு இருந்த பிரதான அடுப்பில் முக்கிய காரியதரிசி ராதாகிருஷ்ணன் நம்பூதிரி தீ மூட்டி பொங்கல் வழிபாட்டை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து கோவில் வளாகம் மற்றும் கோவிலை சுற்றி 20 கிமீ சுற்றளவில் லட்சக்கணக்கான பெண்கள் பொங்கலிட்டு வழிபாடு நடத்தினர். பின்னர் பகல் 11.30 மணிக்கு அம்மனுக்கு பொங்கல் நிவேத்தியம் செய்யப்பட்டது.

    பொங்கல் விழாவின் தொடர்ச்சியாக சக்குளத்துகாவு பகவதி அம்மன் கோவிலில் இம்மாதம் 16-ந் தேதி நாரி பூஜை நடைபெறுகிறது. அன்று முதல் 27-ந் தேதி வரை நோன்பு திருவிழா நடைபெறுகிறது. இந்த நாட்களில் பெண் பக்தர்கள் விரதம் இருந்து இருமுடி கட்டி வந்து அம்மனை வழிபடுவார்கள். 26-ந் தேதி கலச பூஜை மற்றும் திருவாபரண ஊர்வலம் நடைபெறுகிறது. 27-ந் தேதி திரு ஆராட்டுடன் விழா நிறைவு பெறுகிறது.

    • பெண்கள் 4 வீதிகளிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர்.
    • இன்று (புதன்கிழமை) திருவிளக்கு பூஜை நடக்கிறது.

    மண்டைக்காடு பகவதி அம்மன் கோவிலில் ஆவணி அஸ்வதி பொங்கல் விழா நேற்று முன்தினம் தொடங்கியது. விழாவில் நேற்று முன்தினம் மாலையில் சுமங்கலி பூஜை நடந்தது. நேற்று காலை 9 மணிக்கு மங்கள வாத்தியம், 10 மணிக்கு பஜனை, 10.45 மணிக்கு பொங்கல் வழிபாடு போன்றவை நடந்தது.

    நாகர்கோவில் மாநகராட்சி மேயர் மகேஷ் குத்துவிளக்கு ஏற்றினார். பொங்கல் வழிபாட்டை மேகலை மகேஷ் தொடங்கி வைத்தார். நிகழ்ச்சியில் கோவில் ஸ்ரீகாரியம் செந்தில்குமார், கண்காணிப்பாளர் ஆனந்த், மண்டைக்காடு பேரூராட்சி மன்ற தலைவி ராணி ஜெயந்தி, தேவி சேவா சங்க தலைவர் காளிப்பிள்ளை, ஹைந்தவ (இந்து) சேவா சங்க நிர்வாகிகள் முருகன், சசீதரன், ஸ்ரீபத்மநாபன், ஸ்ரீதேவி கலாமன்ற நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

    விழாவையொட்டி ஏராளமான பெண்கள் கலந்து கொண்டு கோவில் வளாகத்திலும், 4 வீதிகளிலும் பொங்கலிட்டு அம்மனை வழிபட்டனர். மதியம் 12.30 மணிக்கு பொங்கலுக்கு தீர்த்தம் தெளித்தல், 1 மணிக்கு தீபாராதனை தொடர்ந்து அன்னதானம் போன்றவை நடந்தது.

    விழாவில் இன்று (புதன்கிழமை) மாலை 5.30 மணிக்கு திருவிளக்கு பூஜை, 6 மணிக்கு தங்கரதம் பவனி, 6.30 மணிக்கு தீபாராதனை, இரவு 7 மணிக்கு சமய வகுப்பு மாணவர்களுக்கும், மண்டைக்காடு தேவஸ்தான மேலநிலைப் பள்ளியில் 10 மற்றும் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் முதல் மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கும் பரிசு வழங்குதல், இரவு 8 மணிக்கு அத்தாழ பூஜை போன்றவை நடைபெறும். இதற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் செய்துள்ளனர்.

    • அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது.
    • வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

    சிங்கம்புணரி அருகே அ.காளாப்பூரில் சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட வடக்கு வாசல் செல்வி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஆண்டுதோறும் ஆடி பொங்கல் விழா வெகு சிறப்பாக கொண்டாடப்படுவது வழக்கம். இதில், அ. காளாப்பூர் மற்றும் அதன் சுற்று வட்டார கிராம பகுதிகளில் உள்ள ஆயிரக்கணக்கான பொதுமக்கள் கலந்து கொண்டு தங்கள் குல தெய்வமாக வழிபடும் வடக்கு வாசல் செல்வி அம்மனுக்கு ஆடி பொங்கல் வைத்து வழிபடுவார்கள்.

    இந்த ஆண்டு திருவிழா நேற்று நடைபெற்றது. முன்னதாக காலையில் கோவில் முன்பு உள்ள பிரமாண்டமான திடலில் கிராம பொதுமக்கள் ஆடுகள் மற்றும் கோழிகளை பலியிட்டு ஆங்காங்கே பொங்கல் வைத்து வழிபாடு செய்தனர். காலை 7 மணிக்கு தொடங்கிய பொங்கல் வைக்கும் விழாவில் ஆயிரக்கணக்கான பெண்கள் கலந்து கொண்டு பொங்கல் வைத்து அம்மனை வழிபட்டனர்.

    இந்த விழா மாலை வரை நடைபெற்றது. இதையொட்டி அம்மனுக்கு சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடந்தது. பின்னர் வண்ணமலர் அலங்காரத்தில் அம்மன் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இதில் சுற்று வட்டார கிராமங்களை சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

    தொடர்ந்து இரவில் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. இந்த விழாவுக்கான ஏற்பாடுகளை சிவகங்கை சமஸ்தானம் தேவஸ்தானம் மற்றும் அ.காளாப்பூர் கிராம பொதுமக்கள் செய்திருந்தனர்.

    ×